தண்ணீர் போத்தல்களின் விலை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் தண்ணீர் போத்தல் தொடர்பில் மத்திய மாகாண இயற்கை கனிய நீர் உற்பத்தியாளர்கள் சங்கம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, சந்தையில் தற்போது 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 70 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என அறிவித்துள்ளது.
கண்டியில் நேற்று (5) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அந்த சங்கத்தின் அழைப்பாளர் சபுமல் குமார இதனைத் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு விலை
இதன்படி தண்ணீர் போத்தல்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நாட்டில் எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொருட்களின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்க டொலருக்கு (usd) நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததுள்ளதால் அதன் பலனை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்க உள்ளதாக வர்த்தக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு ( Ministry of Trade, Commerce and Food Security) அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |