இரத்தினபுரி வைத்தியசாலையில் முதன்முறையாக இடம்பெற்ற வெற்றிகர சத்திரசிகிச்சை
இரத்தினபுரி(ratnapura) போதனா வைத்தியசாலையில் நேற்று(04) முதன்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் தம்மிக்க அழகப்பெரும தெரிவித்தார்.
கஹவத்த பொமலு விகாரையை சேர்ந்த 69 வயதான நிலதுரே சாந்தசிறி தேரர் முதன்முறையாக இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.
சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை
கஹவத்தை அலேகேவத்தையில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய உறவினர் ஒருவரினால் அவருக்கு சிறுநீரகம் வழங்கப்பட்டது.
இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தம்மிக்க அழகப்பெரும முதலாவது சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,
பல வருடங்களாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான வசதிகளை இரத்தினபுரி லயன்ஸ் கழகம் வழங்கி வருகின்றது. அதற்கமைவாக கடந்த 30ஆம் திகதி வைத்தியசாலையில் இந்த சத்திரசிகிச்சை, விசேட வைத்திய நிபுணர்களான லக்ஸ்மன் வீரசேகர, சானக ஆராச்சிகே, கயான் பண்டார, மயக்கவியல் நிபுணர்களான அனுர பெர்னாண்டோ மற்றும் லக்ஸ்மி ரணசிங்க ஆகியோரின் முயற்சியினாலும், அர்ப்பணிப்பினாலும் மேற்கொள்ளப்பட்டது.
5 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை
சுமார் 5 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
எமது வைத்தியசாலையின் சுமார் ஐந்து தாதியர்கள் கண்டி(kandy) பொது வைத்தியசாலையின் சிறுநீரக சத்திரசிகிச்சை பிரிவில் இரண்டு வார பயிற்சியின் பின்னர் இந்த சத்திரசிகிச்சையில் பங்குபற்றினர்.
இந்த சத்திரசிகிச்சை நிகழ்ந்ததை இட்டு எங்கள் மருத்துவமனையை ஒரு வெற்றியாக பார்க்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 17 மணி நேரம் முன்
