நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த மகிழுந்து - விபத்தில் சிக்கிய பெண்ணின் திக்திக் நிமிடங்கள்(காணொளி)
அமெரிக்காவின் நியூயோர்க் நெடுஞ்சாலையில் தீ பற்றி எரிந்த மகிழுந்தில் சிக்கிய பெண்ணை அந்நாட்டு பொதுமக்கள் தைரியமாக காப்பாற்றியுள்ளார்.
குறித்த பெண்ணை பொதுமக்கள் காப்பாற்றும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நியூயோர்க் நகரில் உள்ள லாங் ஐலண்ட் அதிவேக வீதியில் குறித்த மகிழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றியுள்ளது.
பொதுமக்கள்
மகிழுந்து தீ பற்றி எரிந்து கொண்டு இருந்த போது அதற்குள் பெண் ஒருவர் சிக்கி கொண்டு இருப்பதை கவனித்த பொதுமக்கள் விரைந்து சென்று பெண்ணை உடனடியாக வெளியே இழுத்தனர்.
உள்நாட்டு அறிக்கையின் படி, குறித்த பெண் டெனிஸ் உள்ளூர் மருத்துவமனைக்கு வானூர்தி மூலம் அழைத்துச் செல்லப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
Good samaritans rescued a 56-year-old driver from a fiery crash on the Long Island Expressway in New York. pic.twitter.com/U162jFWDpp
— CBS News (@CBSNews) January 17, 2023

