தொடர்ச்சியாக இரண்டு குண்டு வெடிப்பு: குவிக்கப்பட்ட இராணுவம்: காபூலில் பதற்றநிலை
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள சீக்கிய குருத்வாராவிற்கு அருகில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
காபூலில் உள்ள கர்தா பர்வான் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று காணொளியுடன் பதிவிட்டுள்ளது.
இருப்பினும் குருத்வாரா பகுதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், பலியானவர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
இதுகுறித்து புதுடெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகம் கூறுகையில்,
" காபூலில் உள்ள புனித குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து வெளியாகும் செய்திகள் அறிந்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.
நாங்கள் காபூலின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
மேலும், வெளிவரும் முன்னேற்றங்கள் குறித்து கூடுதல் விவரங்களுக்காக காத்திருக்கிறோம் " என்று கூறியது.
பாதுகாப்பு படையினர் சுற்றி வளைப்பு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியை பாதுகாப்பு படையினர் முழுவதும் சுற்றி வளைத்துள்ளனர்.
இருப்பினும், இந்த சம்பவம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
