கிராமத்திற்குள் நுழைந்து துப்பாக்கி சூடு - பரிதாபமாக உயிரிழந்த 30 பேர்..!
நைஜீரியாவில் கிராமத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 30 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நைஜீரியா நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கலகக் குழு அதிகரித்து வருகிறது, அத்துடன் இவை அந்த நாட்டு மக்களுக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது.
நைஜீரியாவின் வடமேற்கு சொகோடா மாகாணத்தில் உள்ள ராக்கா மற்றும் டபாகி ஆகிய கிராமங்களில் மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களுடன் புகுந்து தாக்குதல் நடத்தினர்.
தாக்குதல் சம்பவம்
இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குறித்த இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், தாக்குதல் நடத்தியவர்கள் கிராமத்தில் கொள்ளையடிக்கும் முயற்சியில் உட்புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது கொள்ளையர்களை கைது செய்யும் முயற்சியில் அவர்களை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
