பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் இரவு நேர சோதனை
Sri Lanka
Suren Raghavan
By Shadhu Shanker
பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் இரவு நேர சோதனைகளை மேற்கொள்ள உள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மாணவர்கள் தங்கும் விடுதிகளில் பகிடிவதை சம்பவங்கள் இடம்பெறுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பகிடிவதைகளை தடுக்கும் நோக்கத்தில், பல்கலைக்கழக விடுதிகளில் குறித்த சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சோதனை பணி
குறித்த சோதனை பணிகளில் பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மாணவர் ஆலோசகர்கள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சோதனை பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு போக்குவரத்து வசதி மற்றும் வாகனங்கள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி