கனடியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
கனடாவின் (Canada) 800 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வெளியேற்ற உத்தரவு மற்றும் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவின் மத்திய பிரிட்டிஷ் கொலம்பியாவில் பாரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் நைட் விஷன் ஹெலிகாப்டர் உட்பட நவீன உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆபத்தான நிலை
இந்தநிலையில், ஆபத்தான நிலையினை கருத்திற்கொண்டு 800 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு வெளியேற்ற உத்தரவு மற்றும் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், கரிபூ பிராந்திய நிர்வாகம், அனாஹிம் ஏர, நிம்போ ஏரி, சார்லோட் ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு இவ்வறிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சூடான வானிலை
குறித்த காட்டுத்தீ சுமார் 53 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ள நிலையில், தற்போது வரை அதனை அணைப்பது சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல வாரங்களாக நீடித்த சூடான வானிலை காரணமாக காடு மிகவும் உலர்ந்த நிலையில் இருப்பதே இதற்கான காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீயை அணைக்கவும் மற்றும் பீஃப் ட்ரெயில் கிரீக் காட்டுத்தீயை (100 சதுர கிலோமீட்டருக்கும் அதிக பரப்பளவு) கட்டுப்படுத்தவும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
