“நான்தான் மதுரை 293 ஆவது ஆதீனம்” தனக்கு தானே பட்டம் சூட்டிக் கொண்ட சர்ச்சைக்குரிய சாமி
மதுரை 292 ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரி நாதர் உயிரிழந்தமைக்கு 13 நாட்கள் துக்கம் அனுசரிக்குமாறு சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா அறிவித்துள்ளார்.
இதேவேளை, 13 நாட்கள் துக்கம் முடிந்தவுடன் அருணகிரி நாதருக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என நித்யானந்தா அறிவித்துள்ளார்.
மதுரை 292 ஆவது குருமகா சன்னிதானம் அருணகிரி நாதர் (77) கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அவர் காலமானார்.
இந்த நிலையில் முன்பு எப்போதோ ஒரு முறை அருணகிரி நாதரால் நித்தியானந்தா பட்டம் சூட்டப்பட்டார்.
இந்த நிலையில் அருணகிரி நாதர் இறந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் 293 ஆவது குருமகா சன்னிதானமாக தனக்கு தானே பட்டம் சூட்டிக் கொண்டார் நித்யானந்தா.
2012 ஆம் ஆண்டு மதுரை ஆதீன இளவரசராக அருணகிரி நாதர் எனக்கு பட்டம் சூட்டினார்.
அருணகிரி நாதரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்விதமாக கைலாசா கொடி அரை கம்பத்தில் பறக்கும்.
கைலாசா நாடாளுமன்றம் மற்றும் அனைத்து அரசு அலுவலகத்திலும் கொடி அரை கம்பத்தில் பறக்கும்.
13 நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
செஞ்சோலையில் 53 மாணவிகளை பலியெடுத்த கொடூரத்தை மறக்கத்தான் முடியுமா? 14 மணி நேரம் முன்