மாயமான 2.5 மில்லியனை மீளப் பெற வாய்ப்பில்லை : ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு

Central Bank of Sri Lanka Ministry of Finance Sri Lanka Harsha de Silva Dollars
By Sathangani Jun 11, 2026 06:15 AM GMT
Report

நிதி மோசடி ஒன்றில் இழக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மீளப் பெற்றுக்கொள்ள வாய்ப்பில்லை எனவும், அந்த சுமையை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கி, திறைசேரி, முதன்மைச் செயலாளர் மற்றும் ஆளுநர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் எமது குழுவில் முன்னிலையாகி அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

மத்திய கிழக்கில் உச்சகட்ட கொதிநிலை - வான்பரப்பை அதிரடியாக மூடிய நாடு

மத்திய கிழக்கில் உச்சகட்ட கொதிநிலை - வான்பரப்பை அதிரடியாக மூடிய நாடு

பதில் அறிக்கை

அந்த அறிக்கை தொடர்பில் நாம் கலந்துரையாடிய போது, பல சிக்கல்களும் குறைபாடுகளும் வெளிச்சத்திற்கு வந்தன. இந்த நிலைமைக்கு யார் பொறுப்புக்கூற வேண்டும் என்பது குறித்து இரு வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

மத்திய வங்கி இதற்குப் பெரும் பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்து அறிக்கையில் காணப்பட்ட போதிலும், மத்திய வங்கி அது குறித்து வேறுபட்ட ஒரு நிலைப்பாட்டையே எமக்குத் தெரிவித்தது.

அத்துடன், அவர்களுக்கு இந்த அறிக்கை கிடைக்கப் பெற்றிருக்காததால், அதனை நாம் இன்று அவர்களிடம் கையளித்தோம். இது குறித்த தங்களது பதில் அறிக்கையை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

இருப்பினும், இந்த ஒட்டுமொத்த செயற்பாடுகளும் மின்னஞ்சல் ஊடாகவே பரிமாறப்பட்டுள்ளன. கடந்த ஐந்து வருடங்களாக எவ்வித தொழில்நுட்ப ஆதரவும் இல்லாத, காலாவதியான மின்னஞ்சல் சேவையகம் ஒன்றையே இவர்கள் இதற்காகப் பயன்படுத்தியுள்ளனர் என்பது இங்கு தெளிவாகிறது.

சைபர் பாதுகாப்பு இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த காலகட்டத்தில், அரசாங்கத்தின் முதன்மையான நிறுவனம் ஒன்று எவ்வாறு எவ்வித பாதுகாப்பும் இல்லாத ஒரு மின்னஞ்சல் சேவையகத்தைப் பயன்படுத்தியது என்பது பெரியதொரு கேள்வியாக எழுந்துள்ளது.” என தெரிவித்தார்.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிக்கிரியை இன்று!

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இறுதிக்கிரியை இன்று!

ஒரு புதிய பாதீட்டு திட்டம்

இதேவேளை இச்சம்பவத்தில் ஏதேனும் மோசடி நடந்துள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் "இதுவொரு மிகப்பெரிய திருட்டுச் சம்பவம் என்பதை எனது ஆரம்ப அறிக்கையிலேயே நான் குறிப்பிட்டிருந்தேன்.

இங்கு திருட்டு எதுவும் நடக்கவில்லை என எவரும் வாதிடவில்லை, திருட்டு நடந்துள்ளது என்பது உறுதியானது. ஆனால், இறுதியில் இந்த நிதியை யார் செலுத்தப் போகிறார்கள் என்பதே தற்போதைய கேள்வியாகும்.

மாயமான 2.5 மில்லியனை மீளப் பெற வாய்ப்பில்லை : ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு | No Chance Of Recovering The Missing Usd 2 5 Mn

இது குறித்து நான் செயலாளரிடம் கேட்டபோது, இந்த பணத்தை மீளப் பெற முடிந்தால் செலுத்த முடியும் என்றும், இல்லையெனில் எஞ்சிய பகுதியை பொதுமக்களே ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.

ஆனால், இந்தப் பணத்தை இனி எவ்விதத்திலும் மீளப் பெற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை. எனவே, ஒரு புதிய பாதீட்டு திட்டத்தின் ஊடாக இந்த 2.5 மில்லியன் டொலர் நிதியை பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்தே செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

தற்போது இச்சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களமும் காவல்துறையினரும் இணைந்து தடயவியல் தணிக்கை உள்ளிட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது” என தெரிவித்தார். 

யாழ். போதனா வைத்தியசாலை தீ விபத்து விவகாரம் : அரச தரப்பின் அதிரடி அறிவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை தீ விபத்து விவகாரம் : அரச தரப்பின் அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026