தலைமைகளில் மாற்றமில்லை! பச்சைக்கொடி காட்டிய ஆளும் தரப்பு
நாடாளுமன்றத்தில் செயற்படும் கோப் குழு (COPE) கோபா குழு (COPA) மற்றும் இதர குழுக்களின் தலைமைப் பதவிகளுக்கு முன்னர் இருந்தவர்களையே நியமிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் அரச தலைவர் கோட்டாபயவினால் டிசம்பர் மாதம் இடைநிறுத்தப்பட்டது. அத்துடன் கோப் குழு மற்றும் கோபா குழு உள்ளிட்ட குழுக்களின் செயற்பாடுகளும் இடைநிறுத்தப்பட்டன.
புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் மேற்படி குழுக்களுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அலரிமாளிகையில் பசில் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.
மேற்படி குழுக்களின் தலைவர்களை மாற்றுவதற்கே நாடாளுமன்ற அமர்வு நிறுத்தப்பட்டது என எதிரணிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன நிலையில் அதனை உண்மையென நிரூபிக்கும் வகையில் நாம் செயற்படக்கூடாது.
எனவே, கோப் குழு மற்றும் கோபா குழு உள்ளிட்ட குழுக்களின் தலைமைப்பதவி முன்னர் இருந்தவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என பசில் ராஜபக்ச தெரித்தார்.
இதற்கு ஆளும் தரப்பில் இருந்தும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் சரித ஹேரத், அநுரபிரியதர்சன யாபா மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோர் தலைமைப்பதவிகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
