எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : ஏப்ரல் 10ஆம் திகதி விவாதம்

Parliament of Sri Lanka Kumara Jayakody Jagath Wickramaratne
By Sathangani Mar 19, 2026 11:22 AM GMT
Report

புதிய இணைப்பு

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த நாடாளுமன்ற வாரத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து இன்று (19) நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் பற்றிய குழுக்கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த விவாதம் அன்றைய தினம் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறவுள்ளது.

அத்துடன், 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் ஏப்ரல் 9ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : ஏப்ரல் 10ஆம் திகதி விவாதம் | No Confidence Motion Against Energy Minister

முதலாம் இணைப்பு

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு (Kumara Jayakody) எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பிரேரணை இன்று (19) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை மற்றும் குமார ஜயகொடி தற்போதைய அமைச்சர் பதவியை ஏற்பதற்கு முன்னர் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை விடுமுறை : கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

புதன்கிழமை விடுமுறை : கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தரமற்ற நிலக்கரி இறக்குமதி 

அதன்படி, நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்நிலையத்திற்குத் தேவையான தரமான நிலக்கரியைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்யத் தவறியதன் மூலம் அமைச்சர் தனது கடமையைப் புறக்கணித்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : ஏப்ரல் 10ஆம் திகதி விவாதம் | No Confidence Motion Against Energy Minister

ஒரு முக்கியமான தேசிய எரிசக்தி சொத்தை மேற்பார்வையிடுவதில் இத்தகைய பாரதூரமான கவனக்குறைவு அமைச்சரின் அடிப்படைப் பொறுப்பை மீறுவதாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை உரக் கூட்டுத்தாபனத்தின் கொள்வனவு முகாமையாளராகப் பணியாற்றிய காலத்தில் ஊழல் புரிந்தமை தொடர்பில், கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அமைச்சருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு குறித்தும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.

தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது நினைவேந்தல் மாதம் ஆரம்பம்

தியாக தீபம் அன்னை பூபதியின் 38வது நினைவேந்தல் மாதம் ஆரம்பம்

பெருந்தொகை பெட்ரோலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் அதிரடி கைது!

பெருந்தொகை பெட்ரோலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் அதிரடி கைது!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023