பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு மன்னிப்பில்லை : பிரதமர் அதிரடி அறிவிப்பு

Ministry of Education Vavuniya Harini Amarasuriya Graduates
By Sathangani Aug 03, 2025 03:30 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மாணவர் அரசியலுக்கு எந்த வகையிலும் தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும், ஆனால் வன்முறை மற்றும் பகிடிவதைக்கு எந்த வகையிலும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நூலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் மாணவர்களுடன் நேற்று (02) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர், ”கல்வித் துறையில் அளவுசார்ந்த வளர்ச்சியை ஏற்படுத்துவதை விட, உலகை எதிர்கொள்ளக்கூடிய மாணவர்களை உருவாக்கும் தரமான கல்வியை வழங்கும் இடங்களாக பல்கலைக்கழகங்களை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.

அடுத்தடுத்து மூன்று முன்னாள் கடற்படை தளபதிகள்..! தொடரும் விசாரணை

அடுத்தடுத்து மூன்று முன்னாள் கடற்படை தளபதிகள்..! தொடரும் விசாரணை

பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள்

வெறுமனே இளமானி பட்டதாரிகளை உருவாக்கும் பணிக்கு அப்பால், நாட்டிற்கும் உலகிற்கும் பயனுள்ளதாகவும் உற்பத்தித் திறன் கொண்டதாகவும் இருக்கும் பட்டப்பின்படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகள் நடத்தப்படும் இடங்களாக பல்கலைக்கழகங்களை மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பமாகும்.

எமது பல்கலைக்கழக முறைமை அண்மைக் காலமாக விரிவடைந்துள்ளது, ஆனால் அதன் தரத்தில் போதுமான கவனம் செலுத்தப்படவில்லை. எமது பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வெளியேறும் மாணவர்கள் உலகை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு மன்னிப்பில்லை : பிரதமர் அதிரடி அறிவிப்பு | No Excuse For Engaging In Ragging In Universities

எதிர்வரும் சில ஆண்டுகளில், பல்கலைக்கழகக் கல்வியின் தரம் சர்வதேச மட்டத்தில் இருப்பதை உறுதிசெய்து, பல்கலைக்கழகங்களை பட்டப்பின்படிப்பு, ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகங்களாகவும், ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் மையங்களாகவும் மாற்றுவது அவசியம்.

பல்கலைக்கழகங்கள் தாங்கள் உருவாக்கும் பட்டதாரிகள் விடயத்தில் திருப்தி அடைய முடியாது என்பதை இந்த அவையில் உள்ள பலர் ஒப்புக்கொள்வார்கள். பல்கலைக்கழகத்தில் சேரும் புதிய மாணவர்களுக்கு இருக்க வேண்டிய தரம் மற்றும் அடிப்படை திறன்கள் இல்லை.

வடக்கில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள்

வடக்கில் மூடப்படவுள்ள பல பாடசாலைகள்

மாணவர் போராட்டம்

பாடசாலைக் கல்வி மூலம் செய்ய வேண்டிய பணிகள் முறையாகச் செய்யப்படாததால், பாடசாலையில் கற்றுக்கொள்ள வேண்டியவற்றைப் பல்கலைக்கழகத்தில் கற்பிக்க வேண்டியுள்ளது. இந்த நிலைமை இந்த நாட்டின் உயர்கல்வி முறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பிள்ளை பாடசாலையை விட்டு வெளியேறும்போது, அவர்கள் தொழில் உலகிற்கு அல்லது உயர்கல்விக்கு தயாராக இருப்பதை உறுதி செய்ய நாம் மறந்துவிடக் கூடாது. புதிய கல்வி சீர்திருத்தங்கள் மூலம் அந்த நிலையை மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பகிடிவதையில் ஈடுபடுவோருக்கு மன்னிப்பில்லை : பிரதமர் அதிரடி அறிவிப்பு | No Excuse For Engaging In Ragging In Universities

மேலும், ஒரு பல்கலைக்கழக மாணவர் சமூகமாக, அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பதற்கும், போராட்டம் நடத்துவதற்கும், மாணவர் அரசியலை மேற்கொள்வதற்கும் நாங்கள் எந்தத் தடையையும் ஏற்படுத்தப் போவதில்லை.

ஆனால் பல்கலைக்கழகங்களில் எந்தவிதமான வன்முறை, பகிடிவதை அல்லது அமைதியான மாணவர் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் எதற்கும் நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. இதுபோன்ற விடயங்களை மன்னிக்க நாங்கள் தயாராக இல்லை.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்குத் தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என்ற கொள்கை முடிவில் அரசாங்கம் இருப்பதுடன், அந்த நோக்கத்திற்காக அது செயற்பட்டு வருகின்றது” பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட குழந்தைகள் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

செம்மணியில் கொன்று புதைக்கப்பட்ட குழந்தைகள் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை கிழக்கு, London, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பரந்தன், வவுனியா, Borken, Germany

26 Jul, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, Toronto, Canada

01 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், Scarborough, Canada

03 Aug, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர் முல்லைப்பிலவு, Berlin, Germany

04 Jul, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, இணுவில் கிழக்கு, கொழும்பு, Scarborough, Canada

30 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

திருகோணமலை, மீசாலை கிழக்கு

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Paris, France

25 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 6ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024