கொழும்பு வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு -நோயாளர்கள் அவலம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு வரும் நோயாளர்கள் தமக்கு தேவையான இன்சுலின் இன்மையால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இப்பிரச்சனை பல மாதங்களாக நீடித்து வருவதாகவும், இது தொடர்பாக உயர் சுகாதார அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பணமின்றி தவிக்கும் நோயாளிகள்
இன்சுலின் கிடைக்காததால், வெளியில் இருந்து இன்சுலின் வாங்குவதற்காக எழுதி கொடுப்பதால், நோயாளிகள் பணமின்றி பரிதவிக்கின்றனர். சில நோயாளிகளுக்கு மாதத்திற்கு 2 குப்பிகள் இன்சுலின் தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வெளியில் இருந்து இன்சுலின் குப்பியை வாங்க 1000 ரூபாய்க்கு மேல் செலவழிப்பதாகவும், அதை வாங்க முடியாத நிலையில் உள்ளதாகவும் ஏழை நோயாளிகள் தெரிவிக்கின்றனர்.
பல மாதங்களாக 'இன்சுலின்' இல்லை
இது குறித்து கொழும்பு தேசிய வைத்தியசாலை மருந்தக அதிகாரி ஒருவர் பல மாதங்களாக 'இன்சுலின்' இல்லை என தெரிவித்தார்.
