மொட்டுக் கட்சியை எவராலும் சிதைக்க முடியாது : மகிந்த பகிரங்கம்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) எவராலும் சிதைக்க முடியாது, எமது கட்சி விரைவில் மீண்டெழும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "சிறிலங்கா பொதுஜன பெரமுனவை எவராலும் சிதைக்க முடியாது. அது விரைவில் மீண்டெழும்.
எதிர்வரும் தேர்தல்களில் எமது கட்சி பலத்தைக் காட்டும். பொய் வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
மொட்டுக் கட்சி தற்போது ஆட்சியில் இல்லாததன் அருமையை மக்கள் உணரத் தொடங்கிவிட்டார்கள். எமது கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை நாம் ஏற்படுத்துவோம்" என தெரிவித்தார்.
இது தொடர்பான மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் காலை நேர செய்தியில் காண்க.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |