ஈரான் கப்பலுக்கு அழைப்பு விடுத்த கடற்படை தளபதி! அமைதி காக்கும் இந்தியா
இலங்கையின் கடற்படை தளபதியும் விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர் வாய் வார்த்தையாக இலங்கைக்கு வாருங்கள் என ஈரான் தரப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசனாயக, குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் இன்று(06.03.2026) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கையில்,
“ஆர்பாட்ட காலத்தில் இந்தியாவுக்கு எதிராக என்ன சொன்னீர்கள் என்று தெரியும். ஆனால் இன்று இந்தியாவுக்கு எதிராக அரசாங்கத்தில் உள்ள எவரும் கதைக்க மாட்டார்கள் .
ஈரான் தொடர்பில் கேள்வி
நேற்றைய எனது உரையில் நான் ஈரான் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தேன்.

உண்மையில் கடற்படை பயிற்சி முகாம் எமது நாட்டில் நடைபெற்றிருந்ததா?
விசாகப்பட்டினத்தில் கடந்த மாதம் 18ஆம் திகதி இந்த பயிற்சி நடைபெற்றிருந்தது. தற்போது இந்தியாவுடன் தோளில் கையை போட்டுக்கொண்டு இருக்கின்றார்.
ஆனால் உங்களுக்கே என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லை.
அமைதியாக இந்தியா
நான்கு மணிவரை அந்த கப்பலில் உள்ளவர்களை எவரும் காப்பாற்றவில்லை. அவ்வாறு இந்தியா கைகழுவி விட்டது.
பாதுகாப்பு அமைச்சரே, ஈரான் தூதரகத்துக்கு நாங்கள் சென்ற போது இலங்கையின் கடற்படை தளபதியும் விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அவர் வாய் வார்த்தையாக இலங்கைக்கு வாருங்கள் என கூறியதாக ஈரானிய தூவரால் எங்களிடம் கூறப்பட்டது.
இந்தியா சிறிய தேசமா? உலகத்தில் உள்ள மிகப்பெரிய நாடுகளில் அதுவும் ஒன்று. ஏவுகனை பலம் கொண்ட நாடு. ஆனால் இன்ற அமைதி காக்கிறது.
இன்று இந்தியா எங்கள் தலையில் கட்டிவிட்டு அமைதியாக இருக்கிறது.” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |