அநுர அரசில் இனரீதியான பாகுபாடு இல்லை : அமைச்சர் அறிவிப்பு
இலங்கையர் என்ற அடிப்படையிலேயே தங்களது சேவைகள் அமையும் எனவும் மாறாக இன ரீதியில் அல்லவெனவும் இலங்கை அரசாங்கம் (Sri Lanka Government) அறிவித்துள்ளது.
நேற்று (26) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) இதனைக் கூறியுள்ளார்.
முஸ்லிம்களுக்கு அமைச்சரவை மற்றும் அமைச்சுகளுக்கான செயலாளர்கள் நியமனத்தில் பாரபட்சம் காட்டப்பட்டிருப்பதாகவும், அது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்தும் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவிப்பு
இதற்குப் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கம் இந்த விடயத்தில் இன ரீதியான பாகுபாட்டுடன் செயற்படவில்லை என குறிப்பிட்டார்.
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுகளுக்கான செயலாளர்கள் அவர்களின் இயலுமை அடிப்படையிலேயே தெரிவு செய்யப்பட்டார்கள். அவர்களின் இன அடிப்படையில் அல்ல என சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அரசாங்கம் இலங்கையர் என்ற ரீதியிலேயே செயற்படுகிறதே தவிர, இன ரீதியில் அல்லவென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |