இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் : அமைச்சர் வெளியிட்ட தகவல்
இந்தியாவுடன் (india)சட்டபூர்வமான முறையிலேயே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.அவற்றின்மூலம் நாட்டுக்கு நன்மையே பயக்க உள்ளது.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்தார்.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று(009) விளக்கமளித்த அமைச்சர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
“இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. துறைசார் அமைச்சுகளுக்கும் அனுப்பப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.
திருட்டுத்தனமாக ஒப்பந்தங்கள்
அமைச்சரவையிலும் முன்வைக்கப்பட்டது. எனவே, திருட்டுத்தனமாக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன எனக் கூறப்படுவது ஏற்புடையது அல்ல. இவை இரகசிய ஒப்பந்தங்கள் அல்ல. தகவல் அறியும் சட்டத்தின்கீழ் அவற்றை மக்கள் பெறலாம்.
பிரதமர் மோடியின் இலங்கை பயணம் எமது நாட்டுக்கு வெற்றியளித்துள்ளது. நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இரு தரப்பு ஒப்பந்தங்களில் நாம் கைச்சாத்திடுவோம்.” – என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
