கைவிடப்பட்டது வேலைநிறுத்தம் : ஓடவுள்ள தொடருந்துகள்
பல புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று இரவு முன்னெடுக்கவிருந்த புகையிரத வேலைநிறுத்தம், போக்குவரத்து அமைச்சின் சாதகமான பதிலைத் தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டுள்ளதாக லோகோமோட்டிவ் எஞ்சின் நடத்துநர்கள் சங்கத்தின் (LEOU) செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
சம்பள முரண்பாடுகளை முன்வைத்து இன்று இரவு பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்ததாக தெரிவித்தார்.
வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை
தொழிற்சங்கம் பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அதற்கான தீர்மானம் இன்று போக்குவரத்து அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும் என அமைச்சரவை அலுவலகம் தெரிவித்திருப்பதால், திட்டமிட்ட வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும், வேலைநிறுத்தம் கைவிடப்படுவதாகவும் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
பயணிகளின் வசதிக்காக தொடருந்து சேவைகள் திட்டமிட்டபடி செயல்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |