வடக்கு - கிழக்கு அநுரவின் கட்டுப்பாட்டில் : கையறு நிலையில் தமிழ் தலைவர்கள்
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான ஆட்சியை நாங்கள் ஏற்படுத்துவோம் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தெரிவித்துள்ளார்.
வடக்கு - கிழக்கு மக்கள் அரசுக்கு ஆணை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தலில் என்றுமில்லாதவாறு தேசிய மக்கள் சக்தி அமோக ஆதரவைப் பெற்று வெற்றியீட்டியமையே அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தச் செய்தியைக் கூறுவதற்கு காரணமாகும்.
இந்த நிலையில் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) ஊரின் அதிகாரங்களை எங்களுக்கு தாருங்கள் என்றும் நாட்டின் அதிகாரத்தை நீங்கள் வைத்திருங்கள் என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
வடமாகாணத்தில் கணிசமான நகர சபைகள், மாநகர சபைகள் இருக்கின்ற நிலையில் யாழ் மாநகர சபையும் தேசிய மக்கள் சக்தியின் வசம் செல்வதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது.
இதற்கு காரணம் உட்கட்சி விவகாரம். அத்துடன் இன்று அநுர ஐக்கிய நாடுகள் சபையில் இந்த வார்த்தையை ஆணித்தரமாக கூறுவதற்கும் சுமந்திரன் தான் காரணம்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தெரிவுக்குழுவின் அனுமதியின்றி மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) பரிந்துரை செய்த பெயர்களை நிராகரித்து காடு மேடு எல்லாம் தேடி இரண்டு பெண்கள் உட்பட எட்டுப்பேரை சுமந்திரன் தன் சார்பாக அமர்த்தியதன் வெளிப்பாடு தான் யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி மூன்று ஆசனங்களை வென்றது.
யாழ், கிளிநொச்சி, வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றி என்பது சுமந்திரனிடம் இருக்கின்ற குறைந்த புரிதலின் வெளிப்பாடு தான் காரணமாகும்.
இது குறித்த மேலும் பல விடயங்களை ஐபிசி தமிழின் இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காண்க.....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 3 நாட்கள் முன்
