அமெரிக்காவை வாயடைக்க வைத்த வடகொரிய அதிபர்

United States of America North Korea Kim Jong Un
By Vanan Jul 28, 2022 09:11 PM GMT
Report

அமெரிக்காவுடனான "எந்தவொரு இராணுவ மோதலுக்கும் நாடு முழுமையாக தயாராக உள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார்.

வடகொரியா ஏழாவது அணுகுண்டு சோதனைக்கு தயாராகி வருவதாக கரிசனைகள் வெளியிடப்பட்டுள்ளமைக்கு மத்தியில் அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் மோதல் வெடிக்கும் அபாயம்

அமெரிக்காவை வாயடைக்க வைத்த வடகொரிய அதிபர் | North Korea Ready To Fight Us Kim Jong Un Says

வடகொரியத் தலைநகர் யொங்பியோங்கில் நடைபெற்ற கொரிய யுத்தத்தின் ஆண்டு நிறைவு விழா, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

1950 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்த யுத்தத்தில் அமெரிக்காவை வெற்றிகொண்டதாக வடகொரியா கூறிவருகின்றது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் யொங்பியோங்கில் இராணுவ அணிவகுப்புகள், வாண வேடிக்கைகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.

அமெரிக்காவின் தவறான சித்தரிப்பு

அமெரிக்காவை வாயடைக்க வைத்த வடகொரிய அதிபர் | North Korea Ready To Fight Us Kim Jong Un Says

இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய கிம் ஜோங் உன், அமெரிக்காவின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் காரணமாக, தற்காற்பை உறுதி செய்யும் வரலாற்றுப் பணியை அவசரமாக மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளதாக கூறியுள்ளார்.

வடகொரியாவின் வழக்கமான இராணுவ பயிற்சிகளை ஆத்திரமூட்டும் செயற்பாடு என அமெரிக்கா தவறாக சித்தரித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உடனடி மோதல் ஏற்படும் பட்சத்தில் வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கான ஒரு திட்டமாக முன்னெச்சரிக்கை தாக்குதல்களை நடத்துவதன் மூலம், தென் கொரியா செயற்படத் திட்டமிட்டுள்ளதாக கிம் ஜோன் உன் கூறியுள்ளார்.

இதற்கு அமெரிக்கா இதுவரை பதில் கருத்து எதனையும் முன்வைக்கவில்லை.

தென் கொரிய அரசாங்கமும் இராணுவமும் அழிக்கப்படும்

அமெரிக்காவை வாயடைக்க வைத்த வடகொரிய அதிபர் | North Korea Ready To Fight Us Kim Jong Un Says

தென் கொரிய அதிபர் யூன் சுக்-யோல் முன்கூட்டிய தாக்குதலை நடத்தினால், அவரின் அரசாங்கமும் இராணுவமும் "அழிக்கப்படும் எனவும் வடகொரிய அதிபர் எச்சரித்துள்ளார்.

இதேவேளை ரஷ்யா மற்றும் சீனாவுடன் அணு ஆயுத மோதலின் அதிகரித்துவரும் அபாயம் குறித்து பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்டீபன் லவ்க்ரோவ் எச்சரித்துள்ளார்.

பனிப்போர் காலத்தில் அமைதியை நிலைநாட்ட உதவிய தகவல் தொடர்பாடல்களின் செயலிழப்பானது இந்த ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மூலோபாய அபாயங்கள் பரந்துபட்ட அளவில் காணப்படும் சந்தர்ப்பத்தில் பேச்சுக்களை நடத்துவதிலும் குறைபாடுகள் காணப்படுவதுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், ஆயுதங்களின் பெருக்கம் மற்றும் விண்வெளி போன்ற பகுதிகளில் அதிகரித்து வரும் போட்டிகளும் மோதல்களுக்கான அதிகமான வழிகளை ஏற்படுத்துவதாகவும் ஸ்டீபன் லவ்க்ரோவ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி