நாடு வானில் நடந்த அசம்பாவிதம் - தோல்வியில் முடிந்த வட கொரியாவின் சோதனை!
வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்துள்ளது.
இது தொடர்பான செய்தியை கொரியாவின் மத்திய ஊடக நிறுவனம் வெளியிட்டுள்ளது.
உளவு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ரொக்கெட், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் அதன் செயற்பாடு ஸ்தம்பிதமடைந்துள்ளது.
தோல்வியில் முடிந்த சோதனை
பின்னர், குறித்த ஏவுகணையானது நடுவானில் வெடித்து சிதறி கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்துள்ளது.
வடகொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதால், ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுவதற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், வடகொரியாவின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி-யில் இருந்து குறித்த ரொக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
ரொக்கெட் ஏவப்படுவதை அடுத்து தென் கொரிய தலைநகர் சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், எதிர்பார்த்த பாரிய விளைவுகள் எதுவும் ஏற்படாததால், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
தடைகளை மீறி சோதனை
இதேவேளை, வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவப்படும் தகவலுக்கு ஜப்பான் அரசு பதிலடி கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதாவது தனது எல்லைக்குள் வாடா கொரியாவின் ரொக்கெட் வந்தால் அதனை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டு இருப்பதாக ஜப்பான் தெரிவித்து இருந்தது.
தொலை தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதித்து இருக்கின்றது.
எல்லா தடைகளையும் மீறியே வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது.
