வடக்கு கடற்பரப்பு தமிழக மீனவர்கள் வசம் செல்ல கூட்டமைப்பே காரணம் -விமலின் புதிய கண்டுபிடிப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலோசனையின் பேரில், வடக்கு கடற்பகுதி முழுவதையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
வடக்கு கடற் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் தென்னிந்திய மீனவர்களைக் கைது செய்ய வேண்டாமென கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனை
வடக்கு கடற்பகுதியை மீட்டுத் தருமாறு வட பகுதி மீனவர்கள் நீதிமன்றத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையின் பேரிலேயே தமிழ்நாட்டு மீனவர்கள் வடக்குக் கடற் பகுதியை கொள்ளையடிக்க இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் இறையாண்மை இல்லாதுபோகும் என்றார்.
இலங்கையின் இறையாண்மை நாட்டு மக்களிடமே காணப்படுகிறது. ஆனால், நாட்டின் சுயாதீனத்தை நாட்டின் பாதுகாப்புத் தரப்பினரே பாதுகாக்க வேண்டும். எனினும், வடக்குக் கடல் பகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டாமென கடற் படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எமது நாட்டின் கடல் வளம் கொள்ளையடிப்பு
எமது நாட்டின் கடல் வளத்தை மற்றொரு நாட்டின் மீனவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கப்பட்டு நாட்டின் சுயாதீனத்தை அரசாங்கம் இல்லாதொழிப்பதாகவும் அவர் கூறினார்.
நாடு கொஞ்சம்
கொஞ்சமாக
சுயாதீனத்தை இழந்து
வருகிறது. பொருளாதார
நெருக்கடியை
காரணங்காட்டி
நாட்டின் சுயாதீனத்தை
இல்லாதொழித்து
வருகிறார்கள்.
கையெழுத்திட
முடியாமல்போன எம்.சி.சி
ஒப்பந்தத்தையும் வேறொரு
பெயரில் அரசாங்கம்
கொண்டுவரவுள்ளது.
மக்களின் எதிர்ப்பால்
கைவிடப்பட்ட
இந்தியாவுடனான
எட்கா ஒப்பந்தத்தையும்
அரசாங்கம்
கையெழுத்திடப்போகிறது
என்றார்.
