வடக்கில் தமிழர்களின் பூர்வீக கிராமங்கள் குறித்து ரவிகரன் வலியுறுத்து!
முல்லைத்தீவிலுள்ள(Mullaitivu) தமிழர்களின் பூர்வீக கிராமங்களான தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான்குளம் ஆகிய கிராமங்கள் மீள்குடியேற்றப்பட வேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் (T. Raviharan) வலியுறுத்தியுள்ளார்.
தண்ணிமுறிப்பு கிராமத்தைப் பூர்வீகமாகக்கொண்ட மக்கள் சிலருடன் கலந்துரையாடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 1984ஆம் ஆண்டு ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இராணுவகெடுபிடிகள் காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
மீளக்குடியமர்த்த நடவடிக்கை
இந்நிலையில், குறித்த ஆண்டான்குளம் மற்றும், தண்ணிமுறிப்பு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தமது இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து 40வருடங்களாகியுள்ளபோதிலும் இதுவரை மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறான நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த பகுதிகளைச் சேர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதற்காக உரியதரப்பினருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், குருந்தூர் மலை வழிபாடுகளைத் தொடர்ந்து, தொல்லியல் திணைக்களத்தின் இடையூறால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குருந்தூர்க்குளத்தின் அபிவிருத்தி வேலைகள் தொடர்பிலும் நாடளுமன்ற உறுப்பினர் அவதானம் செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |