பதவியில் இருந்து தூக்கப்படுகிறாரா வடக்கு ஆளுநர் - வெளியான உண்மை நிலவரம்
தம்மை பதவியில் இருந்து விலகுமாறு அதிபர் தரப்பில் இருந்து எந்த அறிவுறுத்தல்களும் தமக்கு விடுக்கப்படவில்லை என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
முன்னதாக வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட சில மாகாண ஆளுநர்களை குறித்த பதவியில் இருந்து விலகுமாறு அதிபர் செயலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
உண்மைத் தன்மை
இந்தநிலையில், குறித்த விடயத்தின் உண்மைத்தன்மை தொடர்பில், கருத்து தெரிவித்த போதே வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறித்த விடயத்தை தெரிவித்தார்.
ஆனால், ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு, அதிபர் செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர், தன்னைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்தார் என கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
அதிபரின் பிரித்தானிய விஜயத்தின் பின்னர், ஆளுநர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளதால், தன்னைப் பதவி விலகுமாறு, அதிபர் செயலகத்தின் குறித்த உயர் அதிகாரி தனக்கு அறிவித்தார் என்றும் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
பதவி விலகுமாறு தொலைபேசி அழைப்பு - கிழக்கு மாகாண ஆளுநர் பகிரங்கம்..!
