அமைச்சரவை கூட்டத்துக்கு அழைக்கவில்லை! மத்திய வங்கி ஆளுநர் தகவல்
cabral
cabinat
jeysundara
aatikala
By Amal
அமைச்சரவை கூட்டத்துக்கு தாம் அழைக்கப்படவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
”சர்வதேச நாணய நிதியம் தொடர்பான தீர்மானம் எடுப்பதற்காக இன்று அமைச்சரவை கூட்டத்தின்போது சமுகமளிக்குமாறு தாம் கேட்கப்பட்டதாக எதிர்கட்சியின் உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்“
எனினும் இது முற்றிலும் தவறான செய்தி என்று கப்ரால் குறிப்பிட்டார்.
2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் பின்னர் இடம்பெறும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கமளிப்பதற்காக ஜனாதிபதி செயலாளர் பிபி ஜெயசுந்தர மற்றும் திறைசேறியின் செயலாளர் எஸ் ஆர் ஆட்டிக்கல ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகியிருந்தன
எனினும் தமக்கு அழைப்பு எதுவும் வரவில்லை என்று கப்ரால் குறி்ப்பிட்டுள்ளார்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்