அதிபர் தேர்தலில் குதிக்க உள்ள சம்பிக்க - பகிரங்க அறிவிப்பு..!
Election Commission of Sri Lanka
Champika Ranawaka
Election
By Dharu
அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடும் சாத்தியம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நாட்டை ஆளத் தகுதியற்றவர் என யாராவது கருதுகிறார்களா எனவும் சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
‘‘அதிபராக யார் சிறந்தவர் என்பதை பொதுமக்கள் இறுதியில் தீர்மானிப்பார்கள்.
அதிபர் வேட்பாளர்
குடும்ப ஆட்சியையோ அல்லது பெற்றோர்கள் செய்தவற்றின் மீது சவாரி செய்வதையோ ஆதரிக்க மாட்டேன்.
அடுத்த அதிபர் வேட்பாளர் வெறுமனே விளையாட்டில் சிறந்து விளங்குபவர் அல்லது ஒரு சிறந்த இராணுவத் தலைவராக இருக்கக்கூடாது.
மாறாக, அடுத்த அதிபர் வேட்பாளர் நாட்டை சிறப்பாக நிர்வகிக்கக் கூடிய ஒருவராக இருக்க வேண்டும்‘‘ என தெரிவித்துள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி