இலங்கை மக்கள் தொடர்பில் வெளியான அபாய அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
மலிவான உணவு
இலங்கையிலுள்ள குடும்பங்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்த அல்லது மலிவான உணவை உண்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டத்தின் மாதாந்த அறிக்கையின்படி, இலங்கைக் குடும்பங்களில் 80 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மலிவான அல்லது மட்டுப்படுத்தப்பட்ட உணவை உண்கின்றனர், இது ஊட்டச்சத்து குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கிறது.
தொடர்ச்சியாக இரண்டு பருவங்களுக்கு நெல் விளைச்சல் குறைந்ததால் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரிக்கிறது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பணமதிப்பிழப்பு
பணமதிப்பிழப்பு காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் விலை 20% அதிகரித்துள்ளதாகவும், விநியோகத் தட்டுப்பாடு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக உள்ளூர் அரிசியின் விலை 6% அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி