நாளை முதல் நடைமுறை :மீறினால் பாயப்போகும் சட்டம்
                                    
                    Sri Lankan Peoples
                
                                                
                    NPP Government
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    நாளை (01) முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து இலகுரக வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் அறிவித்துள்ளது.
வீதி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த புதிய சட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், தெற்கு, கொழும்பு - கட்டுநாயக்க மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட நாட்டின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளுக்கும் இது பொருந்தும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
இந்த விதியை பின்பற்றாத ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இது தொடர்பாக காவல்துறை மற்றும் அதிவேக நெடுஞ்சாலைசாலை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்