கொழும்பில் பதற்ற நிலை..! போராட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை - கண்ணீர் புகை தாக்குதல் ( காணொளி)
இரண்டாம் இணைப்பு
கொழும்பில் தற்போது இடம்பெற்று வரும் போராட்டத்தில் போராட்டத்தை மேற்கொள்வோர் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு எதிராக கோட்டை காவல்துறையினரும் மருதானை காவல்துறையினரும் இணைந்து இரண்டு நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்த நிலையில், இன்று பிற்பகல் கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
போராட்டத்தை கைவிடுமாறு போராட்டக்காரர்களுக்கு காவல்துறையினர் அறிவித்திருந்தனர். ஆனால், அவர்கள் கொழும்பு இப்பன்வல சந்தியில் வீதியை மறித்த போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்களை கலைக்க காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அங்கு காயமடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
தேர்தலை ஒத்திவைக்கும் சதிக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டம் தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகிறது.
மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. இதனால் பல பாகங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்த நிலையில், கொழும்பு விகாரமஹா தேவி பூங்காவிற்கு அருகாமையில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
நேரலை
