சாரதி அனுமதி பத்திரம் - எத்தனை ஆயிரம் பெண்கள் தகுதி தெரியுமா..!
Sri Lanka
Driving Licence
By pavan
இலங்கையில் மொத்தம் 12,700,000 சாரதி அனுமதி பத்திரம் வைத்திருப்பவர்களில் 1,122,418 பெண்கள் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது.
அதிலும் அவர்களில் 2082 பெண்கள் கனரக வாகன அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதாக DMT ஆணையாளர் வசந்த ஆரியரத்ன தெரிவித்ததாக தெரியவந்துள்ளது.
2010ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்குள் 23,488 பெண்களுக்கு சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டதாகக் கூறிய அவர், 2020ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான 10 வருட காலப்பகுதியில் பெண் விண்ணப்பதாரர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
10 வருட காலப்பகுதி

இந்த 10 வருட காலப்பகுதியில் மொத்தம் 943,749 பெண்கள் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி