புலம்பெயர் நாடொன்றில் தமிழர்கள் வாழும் பகுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
United Kingdom
World
By Sathangani
பிரித்தானியாவில் (UK) 9 மாத குழந்தையை குப்பைத் தொட்டியில் மூடி கொலை செய்த முன்பள்ளியின் பிரதி முகாமையாளருக்கு 14 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட குழந்தை
90 நிமிடங்களுக்கு மேலாக குப்பைத் தொட்டியில் வைத்து பெண் குழந்தையின் முகத்தை மூடி கொலை செய்தமைக்காக நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
குழந்தையை மோசமாக நடத்தி கொலை செய்ததனால் கேட் ரஃப்லி (Kate Roughley) மனிதக் கொலைக் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குடும்பத்தினரால் ஜிகி என்று அழைக்கப்படும் குறித்த குழந்தை, மூச்சுத் திணறலால் உயிரிழந்ததாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்