இடைநடுவே கழன்று ஓடிய பேருந்து சில்லு - பயணிகளை அச்சத்தில் ஆழ்த்திய சம்பவம்!
Nuwara Eliya
Accident
By Dharu
நுவரெலியாவில் இருந்து நானுஓயா நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு பேருந்து பயணித்துக் கொண்டிருக்கம்போதே கழன்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் சாரதியின் சாதுரியத்தால் பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.
இன்றைய தினம்(8) பிற்பகல் நுவரெலியா - பதுளை வீதியில் அமைந்துள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பேருந்தின் பின்பக்க சில்லு அச்சில் இருந்து திடீரென விலகியதாக கூறப்படுகின்றது.
சாரதியின் சாமர்த்தியம்
இந்நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வண்ணம் பேருந்து நிறுத்தப்பட்டதாக பயணிகள் தெரிவித்திருந்தனர்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி