மாலை நேர வகுப்பிற்கு சென்ற சிறுவன் மாயம் - காவல்துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
இராகலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுவன் 24.02.2023 அன்று மாலை காணாமற் போயுள்ளதாகவும், 10 வயதுடையவர் எனவும் இராகலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர் இராகலை கிருஸ்ணன் ஜூனியர் பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி பயிலும் சுரேஷ்குமார் லுக்சான் லோகிதன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பதுளை - ஹாலி எல திக்வல தோட்டத்தை சேர்ந்த இந்த மாணவனின் தாய் வெளிநாட்டுக்கு தொழிலுக்காக சென்று நான்கு மாதங்களாகின்றன. தந்தை பதுளையில் வாகனங்கள் திருத்தும் நிலையம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
மாயமான சிறுவன்
இந்த நிலையில் தனது ஒரே மகனை இராகலையில் சென் லெணாட்ஸ் தோட்டத்தில் உள்ள பேர்த்தியின் அரவணைப்பில் விட்டுள்ளனர். மேலும் பேர்த்தி இராகலை உயர் நிலை பாடசாலையில் ஆசிரியையாக கடமையாற்றுகின்றார்.
சிறுவன் காணாமற் போன தினத்தன்று மாலை 05 மணிக்கு தான் வழமையாக செல்லும் பிரத்தியோக வகுப்புக்கு சென்றுள்ளார். இவ்வாறு சென்ற சிறுவன் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில் சிறுவனின் பேர்த்தி சிறுவனைத் தேடியதுடன், சிறுவன் காணாமற் போயுள்ளதாக இரவு 7.45 மணியளவில் இராகலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தொடர்புகளுக்கு
அதேநேரத்தில் இந்த சிறுவன் வீட்டை விட்டு செல்லும் போது நீல நிற டெனிம் நீளக்காற்சட்டையும், நீல நிற சேட்டும் அணிந்திருந்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தால் இராகலை காவல் நிலையத்திற்கு 052 2265 222, மற்றும் 076 366 6106 என்ற தொலை பேசிக்கு தொடர்பு கொள்ளுமாறு இராகலை காவல்துறையினர் கேட்டுள்ளனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)