மழையினால் கைவிடப்பட்ட இலங்கை - நியூசிலாந்து ஒருநாள் போட்டி!
புதிய இணைப்பு
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, நியூசிலாந்து அணி 21 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடிய போது போட்டியில் மழை குறுக்கிட்டது.
இதனையடுத்து மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
சுற்றுலா நியூசிலாந்து (New Zealand) அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நடைபெறுகிறது.
குறித்த போட்டி கண்டி (Kandy) பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (19) இடம்பெறுகிறது.
நாணய சுழற்சி
அதன்படி, இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.
இதன்போது, இலங்கை அணி சார்பில் நிஷான் மதுஷ்க, அவிஷ்க பெர்னாண்டோ, நுவனிந்து பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சரித் அசங்க (கேப்டன்), ஜனித் லியனகே, சமிந்து விக்ரமசிங்க, மஹிஷ் தீக்ஷன, ஜெப்ரி வண்டசே, மொஹமட் ஷிராஸ், டில்ஷான் மதுஷங்க ஆகியோர் விளையாடவுள்ளனர்.
இதேவேளை, நியூசிலாந்து அணி சார்பில் மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜோஷ் கிளார்க்சன், ஜேக்கப் டஃபி, சாக் ஃபாக்ஸ், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட், மிட்செல் ஹே, ஆடம் மில்னே, ஹென்றி நிக்கோல்ஸ், க்ளென் பிலிப்ஸ், டிம் ராபின்சன், நாதன் ஸ்மித், இஷ் சோதி, வில் யங் ஆகியோர் விளையாடவுள்ளனர்.
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற நிலையில் தொடரை கைப்பற்றியமை குறிப்பிட்டதக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |