வவுனியாவில் சீல் வைக்கப்பட்ட தனியார் நிறுவனம்
வவுனியாவில் (Vavuniya) விவசாய உற்பத்திகள் மற்றும் உள்ளீடுகளை விற்பனை செய்துவரும் தனியார் நிறுவனமொன்றிற்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை நேற்று (17) நுகர்வோர் அதிகாரசபை உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி நிறுவனத்தில் தரமற்ற தானியங்கள் உள்ளதாக இராணுவ புலனாய்வு பிரிவினரால் வவுனியா மாவட்ட நுகர்வோர் அதிகாரசபைக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளால் அறிவுறுத்தல்
இதனையடுத்து, நேற்று (17) காலை வவுனியா ஈரற்பெரியகுளம் பகுதியில் உள்ள குறித்த நிறுவனம் அதிகாரிகளால் ஆய்வுசெய்யப்பட்டுள்ளது.
இதன்போது தரமற்ற வகையில் காணப்பட்ட பச்சைபயறு ஒரு தொகை மீட்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த திரவப்பசளை ஒரு தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் தரம் தொடர்பாக ஆராய்வதற்காக மாதிரிகள் பெறப்பட்டுள்ளதுடன் பரிசோதனைகள் முடிவடையும் வரை அவற்றை விற்பனை செய்யவேண்டாம் என்று அதிகாரிகளால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு அந்நிறுவனம் சீல்வைத்து மூடப்பட்டுள்ளது.
மேலும், இதேவேளை இன்று (18) குறித்த களஞ்சியத்தை சுகாதார பரிசோதகர்களும் பார்வையிட்டு ஆய்வுசெய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |