ஆசிய சந்தைகளில் உயர்ந்த எண்ணெய் விலை
Japan
India
By Dharu
ஆசிய சந்தையில், பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 2.8% அதிகரித்துள்ளது.
இன்று காலை (17) நிலவரப்படி, பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 2.8% அதிகரித்து 103.08 டொலராக உயர்ந்துள்ளது.
மேலும், அமெரிக்க கச்சா எண்ணெயின் விலையும் சுமார் 3% அதிகரித்து, 96.25 டொலராகப் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை
ஹோர்முஸ் நீரிணையில் பல கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்து சென்றதாக செய்திகள் வெளியானதை அடுத்து, நேற்று (16) எண்ணெய் விலைகள் சற்று குறைந்திருந்தன.

இதற்கிடையில், எரிசக்தி தேவைகளுக்கு வளைகுடா பிராந்தியத்தின் எண்ணெயை நம்பியுள்ள ஜப்பான் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட ஆசிய பங்குச் சந்தை குறியீடுகள் இன்று (17) சற்று உயர்வை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்