எரிபொருள் கப்பல் தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வெளியிட்ட தகவல்
ஆறு முதல் ஏழு நாட்கள் ஆகும்
தற்போது எரிபொருள் கப்பலுக்கான ஓடர் செய்தாலும்,கப்பல் இலங்கைக்கு வருவதற்கு குறைந்தது ஐந்து நாட்கள் ஆகும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து ஒரு கப்பல் ஓடர் செய்யப்பட்டாலும், அது இந்த நாட்டு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டால், முத்துராஜவெல மற்றும் கொலன்னாவில் எண்ணெயை இறக்கி நாடு முழுவதும் விநியோகிக்க ஆறு முதல் ஏழு நாட்கள் ஆகும் என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆறு மாத சேமிப்பு மூன்று மாதமாக குறைப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதன் பின்னர், கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எண்ணெய் தாங்கிகளில் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை ஆறு மாதங்கள் சேமித்து வைத்திருந்த போதும், பின்னர் அது மூன்று மாதங்களாகக் குறைக்கப்பட்டது.
காலங்காலமாக ஆட்சிக்கு வரும் ஊழல் ஆட்சியாளர்களும், கூட்டுத்தாபன தலைவர்களும் அரசியல் கையாட்களை கூட்டுத்தாபனத்தில் சேர்த்து அனைத்து அமைப்புகளையும் திருடிச் சென்றதால்தான் இன்று ஒட்டுமொத்த தேசமும் அதற்கு விலைபோகிறது என கூட்டுத்தாபன உயர் அதிகாரிகள் குழு தெரிவித்துள்ளது.
