சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!
Sri Lanka
Department of Examinations Sri Lanka
G.C.E. (O/L) Examination
By pavan
கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், செயலமர்வுகள், கருத்தரங்குகள் மற்றும் செயற்திட்டங்கள் என்பவற்றை இன்று நள்ளிரவு (23) முதல் இடைநிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சாதாரணதரப் பரீட்சை
அத்துடன், உத்தேச பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுதல், பகிர்தல் கையேடுகளை இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகம் ஊடாக வெளியிடுதல் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி வரையில் 3,658 மத்திய நிலையங்களில் சாதாரண தரப் பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி