மினுவாங்கொடையில் T-56 தோட்டாக்களுடன் ஒருவர் அதிரடி கைது
Sri Lanka Police
Gampaha
Sri Lanka Police Investigation
By Sathangani
மினுவாங்கொடை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட அம்பகஹவத்தை பிரதேசத்தில் T-56 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (24) மாலை கம்பஹா பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது 8 T-56 தோட்டாக்களும், 15 பயிற்சி தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 53 வயதுடைய அம்பகஹவத்தை, மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், மினுவாங்கொடை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 1 நாள் முன்
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு
2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்