தமிழர் தலைநகரில் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்: தொடரும் விசாரணை
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Trincomalee
                
                                                
                    Crime
                
                        
        
            
                
                By Raghav
            
            
                
                
            
        
    திருகோணமலை (Trincomalee) - தம்பலகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கூட்டாம்புளி எனும் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது இன்றைய தினம் (20) மாலை மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலை அன்பு வழிபுரத்தைச் சேர்ந்த 53 வயதான சிவலிங்கம் ஜெயசீலன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை விசாரணை
விவசாயி ஒருவர் தனது வயலுக்குச் சென்ற வேளையில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று காணப்பட்டதை அடுத்து காவல்துறையினருக்ககு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, அவ்விடத்துக்கு வந்த தம்பலகாமம் காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    | 






                                        
                                                                                                                        
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்