தென்னிலங்கையில் விபத்துக்குள்ளான மகிழுந்து: சம்பவ இடத்தில் ஒருவர் பலி
                                    
                    Galle
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Accident
                
                        
        
            
                
                By Raghav
            
            
                
                
            
        
    காலி (Galle) நகருக்கு அருகில் மகிழுந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த குறித்த மகிழுந்து வர்த்தக நிலையத்திற்கு அருகில் நின்றுகொண்டிருந்த நான்கு பெண்கள் மீது மோதியுள்ளது.
படுகாயம்
இதன்போது படுகாயமடைந்த 53 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்

விபத்தில் காயமடைந்த ஏனைய மூவரும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்