ஜெனிவாவில் அமெரிக்கா - ஈரான் நேருக்கு நேர்! அணுசக்தி ஒப்பந்தத்தின் அடுத்த கட்டம்
ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் நாட்டுப் பிரதிநிதிகளிடையே முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பு, நாளை (17-02-2026) சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் இடம்பெறவுள்ளது.
இந்த முக்கியமான சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff) மற்றும் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஒப்பந்தம்
ஈரானுடன் புதிய ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அது அந்நாட்டிற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என ட்ரம்ப் முன்பே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2015இல் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து (JCPOA) 2018இல் அமெரிக்கா விலகியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நீடித்து வந்தது.

இந்தநிலையில், 2025 ஜூன் மாதம் ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பின்னணியில், நாளை நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தை சர்வதேச அளவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கான முத்தரப்புச் சந்திப்பும் நாளை ஜெனிவாவில் நடைபெற வாய்ப்புள்ளதாகக் கிரெம்ளின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ஒரே நாளில் இரு பெரும் உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் ஜெனிவா நகரம் முக்கிய இராஜதந்திர மையமாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மஹா சிவராத்திரி 2026 நேரலை
சிவபூமி எனப்படும் ஈழத்தின் முக்கிய விரதமான மகாசிவராத்திரி… 9 மணி நேரம் முன்