முடிவுக்கு வந்த Hacker சலேனின் உபவாச நாடகம்
முன்னாள் அரச புலனாய்வு சேவைத் தலைவர் சுரேஷ் சலேவின் கைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களைக் கோரிய அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் அருட்தந்தை சிரில் காமினி ஆகியோருக்கு எதிராக, எமது ஆட்சியின் அரசாங்கத்தின்(எதிர்காலத்தில்) கீழ் தண்டனை விதிக்கப்படும் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.
விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு சந்தேக நபரை யாராலும் கட்டாயப்படுத்த முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அது முறையற்ற செல்வாக்கு என்றும், தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவின் ஆசி
இருப்பினும், நேற்று சுரேஷ் சலே தனது கைபேசி மற்றும் மடிக்கணினியின் கடவுச்சொற்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஈஸ்டர் ஞாயிறன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் விளைவாக, சுரேஷ் சலே குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறிப்பாக சுரேஸ் சலே பற்றிய குற்றச்சாட்டுக்கள் தற்போதைய அரசாங்கத்தில் மட்டும் அல்ல. அவை 2018 முதலே வெளிவர ஆரம்பித்திருந்தன.
அதில் 2022 ஆம் ஆண்டு அப்போதைய எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நனயக்காரவால் கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் சுரேஷ் சலே மற்றும் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ராஜபக்ச குடும்பத்தினரின் தொடர்பு, நாடாளுமன்றில் ஒரு கருத்தை வெளியிட்டார்.
மேலும், அக்கட்சியைச் சேர்ந்த தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட குழுவினர் தற்போது குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியை முன்னெடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, தகது கருத்துக்களால் கோட்டாபய மீது நேரடித் தாக்குதல் நடத்திய மனுஷ நனயக்கார, பின்னர் அமைச்சராகவும் அரசாங்கத்தில் இணைந்தார்.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே மற்றும் அரச புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து சந்தேகங்களை மனுஷ நாணயகார எழுப்பினார்.
சலே மற்றும் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான முன்னாள் ஆட்சியுடன் தொடர்புடைய பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நடவடிக்கைகள் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விசாரணை பிடியில் சலே
குறிப்பாக, 2019 Easter attacks தொடர்பாக சில புலனாய்வு அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரணை அவசியம் எனக் கூறினார்.

நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி அவர் பல கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், அவை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மைகள் அல்ல.
விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய குற்றச்சாட்டுகள் என்ற வகையிலேயே முன்வைக்கப்பட்டன. பின்னர் சுரேஷ் சலே அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து, அவை ஆதாரமற்றவை என்றும், சுயாதீன விசாரணை நடத்துமாறு காவல்துறையிடம் கோரியிருந்தார்.
இவ்வாறான தொடர் குற்றச்சாட்டுக்களை சம்பாதித்து வந்த சலே தற்போது குற்றப்புலனாய்வு திணைக்கள விசாரணை பிடியில் இருந்து வருகிறார்.
இதில் இருந்து வெளிவர அவர் மேற்கொண்ட உண்ணா விரத ஓட்டமும் நேற்றோடு முடிவுக்கு வந்தது. நீதிமன்றத்திலும் பொது வெளிகளிலும் சலேவை சார்ந்த ஒரு கும்பல் அவரை வெளியே கொண்டுவந்துவிடவேண்டும் என பொரும் போராட்டத்தை முன்னெடுத்தும் அது தோல்வியிலேயே முடிந்தது.
இதன்படி மருத்துவப் பரிசோதனைகளில் அது அப்பட்டமாக நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே அரங்கேற்றிய 'உண்ணாவிரத நாடகத்தைக்' கைவிட நிர்பந்திக்கப்பட்டுள்ளார் சில அரசியல்வாதிகள் விமர்சித்துள்ளனர்.
திலீப் பீரிஸின் கருத்துக்கள்
இந்த நாட்டின் அரசியலமைப்புக்குட்பட்ட அரசின் கீழ் இயங்கும் 'குற்றவியல் அரசும்' அரசியல் அதிகாரக் கட்டமைப்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன என்றும், இந்த ஊழல்வாதிகளை நீதியின் முன் நிறுத்தும் போராட்டம் நிறுத்தப்பட்டால், நாடு வரலாற்றிலேயே மிக மோசமான பழிவாங்கும் வலைப்பின்னலில் மூழ்கிவிடும் என்றும் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், நேற்று கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேகர முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
இதில், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப் பீரிஸ், சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது அவரது வாகனத்தில் மின்னணு சாதனங்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
விசாரணை அதிகாரிகள் மடிக்கணினிகளைக் கைப்பற்றுவதற்கு முன்பு, சுரேஷ் சலே அதனைத் தனது மகளுடையது என்று கூறி தனது அலுவலகத்தில் விட்டுச்செல்ல முயன்றதாகவும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் வெளிப்படுத்தியது.
மேலும், அந்தச் சாதனங்களை அணுகுவதற்குத் தேவையான கடவுச்சொற்களை சந்தேக நபர் வேண்டுமென்றே வழங்க மறுத்ததாகவும் கூறப்பட்டது.
தற்போதைய விசாரணையை எளிதாக்கும் பொருட்டு, சந்தேக நபரான சலேவின் கடவுச்சொற்களை வழங்க விசாரணை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என திலீப் பீரிஸ் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
ஏனெனில், அவர் அனுமதியின்றி கணினி அமைப்புகளுக்குள் நுழைய சிறப்புப் பயிற்சி பெற்ற ஒரு திறமையான ஹேக்கர் ஆவார் என அவர் கூறியிருந்தார்.
இருப்பினும், சுரேஷ் சலேவுக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்னாண்டோ, ஒரு நீதவான் நீதிமன்றத்திற்கு அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்க சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்று கூறி, அதனை வன்மையாக எதிர்த்தார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் பரிசீலித்த நீதவான் பசன் அமரசேகர, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 124-வது பிரிவின்படி, குற்றவியல் விசாரணைகளை எளிதாக்குவதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு முழு சட்ட அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தார்.
அதன்படி, முன்னாள் புலனாய்வுத் தலைவர் சம்பந்தப்பட்ட சாதனங்களின் கடவுச்சொற்களை உடனடியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |