விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதில் முக்கிய தகவல்களை வழங்கிய சுரேஷ் சலே
சுரேஷ் சலே போன்ற சிறந்த அதிகாரிகள் வழங்கிய புலனாய்வுத் தகவல்கள் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பல தேவாலயங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டு 269 உயிர்களைப் பறித்தபோதிலும், எந்தவொரு அருட் தந்தையரும் காயமடையவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், ஆனால் அது நடத்தப்பட்ட கொடூரமான விதத்திற்கே எதிர்ப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
அருட்தந்தையர்களை விடவும் நாட்டிற்கு அதிகசேவை
இன்று ஈஸ்டர் தாக்குதல்களுக்கு குற்றம் சாட்டப்படும் முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே, அவர் மீது குற்றம் சாட்டப்படும் அருட்தந்தையர்களை விட இந்த நாட்டிற்கு அதிக சேவை செய்த அதிகாரி என்று விஜேதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.

அவர் தவறு செய்திருந்தால் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்று தாம் கூறவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 மணி நேரம் முன்