மீண்டும் தூசு தட்டப்படும் லசந்த, பிரகீத் வழக்குகள் - ஊடகப் பிரதி அமைச்சரின் அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Journalists In Sri Lanka Murder National People's Power - NPP NPP Government
By Thulsi Jul 02, 2026 03:44 AM GMT
Report

பிரகீத் எக்னெலிகொட உள்ளடங்களாக, கடந்த காலங்களில் மூடி மறைக்கப்பட்டிருந்த பாரிய குற்றங்கள் தொடர்பான பழைய கோப்புகள் அனைத்தும் மீண்டும் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று வெகுஜன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, "படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் வழக்குகள் தற்போது விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

கோட்டாபயவுக்கு கிடைத்த சட்டவிரோத சலுகை! வெளிச்சத்துக்கு வந்த ஜனாதிபதி தேர்தல் ஊழல்

கோட்டாபயவுக்கு கிடைத்த சட்டவிரோத சலுகை! வெளிச்சத்துக்கு வந்த ஜனாதிபதி தேர்தல் ஊழல்

மக்கள் பொது வீதிகளில் படுகொலை

கடந்த காலங்களில் இவ்வாறான பல கோப்புகள் மூடி மறைக்கப்பட்டிருந்தன. வெறும் பெயரளவில் மாத்திரமே விசாரணைகள் பற்றி பேசப்பட்டன.

மீண்டும் தூசு தட்டப்படும் லசந்த, பிரகீத் வழக்குகள் - ஊடகப் பிரதி அமைச்சரின் அறிவிப்பு | Lasantha Prageeth Investigation Deputy Minister

இவற்றுக்கு நீதி பெற்றுத்தருவதாக வாக்குறுதி வழங்கி சிலர் ஆட்சிப்பீடமும் ஏறினர். ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

குறிப்பாக, 2015ஆம் ஆண்டில் நல்லாட்சி அரசு மலர்ந்த போது, இந்த நீதியை நிலைநாட்டுவதற்காகவே மக்கள் மிகப் பாரிய மக்கள் ஆணையை வழங்கியிருந்தனர்.

2015 வரை நீடித்த மகிந்த ராஜபக்சவின் அரசின் மீது மக்களுக்கு இருந்த கடுமையான அதிருப்தி மற்றும் கோபத்தின் காரணமாகவே அந்த மக்கள் ஆணை கிடைத்தது. ஏனெனில், அது ஒரு அடக்குமுறை அரசாகவே செயற்பட்டதுடன், மக்கள் பொது வீதிகளில் படுகொலை செய்யப்பட்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் இரத்து : அரச தரப்பு அறிவிப்பு

பயங்கரவாத தடைச்சட்டம் விரைவில் இரத்து : அரச தரப்பு அறிவிப்பு

மக்கள் ஆணை

முக்கியமாக ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக உரிமைகள் பற்றி பேசும் அமைப்புகளிடம் நான் இப்போதும் கேட்கின்றேன், உங்களுக்கு அந்தக் கடந்த கால வரலாறு மறந்துவிட்டதா? பட்டப்பகலில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர், சிலர் நாட்டை விட்டு வெளியேறினர், சிலரது கை, கால்கள் உடைக்கப்பட்டன, வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்டனர்.

மீண்டும் தூசு தட்டப்படும் லசந்த, பிரகீத் வழக்குகள் - ஊடகப் பிரதி அமைச்சரின் அறிவிப்பு | Lasantha Prageeth Investigation Deputy Minister

இவற்றுக்குச் சரியான முறையில் நீதியை நிலைநாட்டுவதற்கான மிக நெருக்கமான அதிகார பலம் நல்லாட்சி அரசுக்குக் கிடைத்தது. ஆனால், நல்லாட்சி அரசு அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, பழைய பாதையிலேயே பயணிக்கத் தொடங்கியது.

அதேபோன்று, ஒரு புதிய அரசமைப்பைக் கொண்டு வருவதற்கான மிகச் சிறந்த மக்கள் ஆணை நல்லாட்சி அரசுக்கு இருந்தது.

ஆனால், அதிலும் அவர்கள் தோல்வியடைந்தனர். இதன் காரணமாக, மிகப்பாரிய சட்ட சீர்திருத்தங்களையும் நல்ல மாற்றங்களையும் கொண்டு வருவதற்கு கிடைத்த பல சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டன.

எனவே, இந்தச் சந்தர்ப்பத்தில் எமக்கு மிகப் பாரிய பொறுப்பு இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். பல வருடங்கள் பழமையான குற்றங்கள் தொடர்பில் மீண்டும் ஆராய்வது என்பது இலகுவான காரியம் அல்ல. எனினும், இவற்றுக்கான நீதி நிச்சயமாக நிலைநாட்டப்படும் என்றார்.

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி - இருவர் காயம்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் பலி - இருவர் காயம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026