டெங்கு நோய் அபாயம் : கொழும்பில் மூடப்பட்ட பல்கலைக்கழகம்
மாணவர்களிடையே டெங்கு மற்றும் இன்ப்ளூயன்ஸா நோய்கள் பரவியதன் காரணமாக, கொழும்பில் உள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் குறித்த பல்கலைக்கழகம் ஜூலை 13 வரை மூடப்பட்டிருக்கும் என்று கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
அத்துடன் இக்காலகட்டத்தில் பல்கலைக்கழக விடுதிகளும் மூடப்பட்டிருக்கும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பிரதி அமைச்சர் தெரிவிப்பு
ராஜகிரிய மற்றும் தெஹிவளையில் அமைந்துள்ள பல்கலைக்கழக விடுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும், கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்களுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் புதிதாக 1,217 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் இதுவரை 55,406 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
3 நாட்கள் முன்