யாழில் இராணுவ சிப்பாய்க்காக கட்டப்பட்ட வீடு கையளிப்பு
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இராணுவ சிப்பாய்க்காக கட்டப்பட்ட வீடு இன்று(16) கையளிக்கப்பட்டது.
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ குறித்த வீட்டுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த நிலையில், கட்டி முடிக்கப்பட்ட வீடானது இன்று யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரத்னாயக்காவினால் கையளிக்கப்பட்டது.
இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ சிப்பாய்க்கே வீடு
இராணுவத்தில் பணியாற்றும் தமிழ் இராணுவ லான்ட்ஸ்கோப்ரல் எம்.ஆர் ராஜா என்பவருக்கு குறித்த வீடு கட்டி வழங்கப்பட்டது

இராணுவத்தின் சேவா வனிதா திட்டத்தின் ஊடாக 1.5 மில்லியன் ரூபா செலவில் குறித்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் சர்வ மத தலைவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி கோப்பாய் பிரதேச செயலாளர், இராணுவ தளபதிகள், காவல்துறையினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |