நாட்டை வந்தடைந்த ஷிரந்திக்கு FCIDயிடமிருந்து பறந்த அதிரடி உத்தரவு!
சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு (05) நாடு திரும்பிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்சவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்மைய ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 13ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஷிரந்தி ராஜபக்ச மலேசியாவிலிருந்து வந்த விமானம் மூலம் நேற்று இரவு சுமார் 11:20 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
விடுக்கப்பட்டிருந்த அழைப்பாணை
மருத்துவ சிகிச்சைக்காக கடந்த செப்டெம்பர் மாதம்16 ஆம் திகதி அதிகாலை அவர் சிங்கப்பூர் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உடல்நலக்குறைவு காரணமாக அதற்கு முந்தைய நாள் (15) கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த பின்னர் அங்கிருந்து நேரடியாக விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) ஏற்கனவே அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில், ஷிரந்தி ராஜபக்ச தெரிந்தே நாட்டை விட்டு வெளியேறியதாகக் கூறப்பட்ட செய்திகளை ராஜபக்ச குடும்பத்தினர் மறுத்திருந்தனர்.
முன்பிணை மனு தாக்கல்
அத்துடன் விமான நிலையத்திற்குச் செல்லும் வரை அவருக்கு அது குறித்து அறிவிக்கப்படவில்லை என்று அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இதேவேளை 'சிறிலிய சவிய' அமைப்பின் நிதி விவகாரங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதைத் தடுக்கும் உத்தரவைக் கோரி, அவரது சட்டத்தரணிகள் நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் முன்பிணை மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |