வவுனியாவில் பெண்ணை அத்துமீறலுக்கு உட்படுத்தி நகைகளை கொள்ளையடித்த ஐவர் கைது!

Vavuniya Sri Lanka Police Investigation Arrest
By Independent Writer Aug 16, 2026 11:18 AM GMT
Report
Courtesy: kapil

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டாக அத்துமீறலுக்கு உட்படுத்தி கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது.

கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றை உடைத்து உட் சென்ற சிலர் அங்கிருந்த வாகனச் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு, வீட்டு உரிமையாளரான 51 வயது பெண்ணை வாயை பிலாஸ்டரால் ஒட்டி கைகளை பின்பக்கமாக கட்டி, அவர் அணிந்திருந்த நகைகளை கழற்றி எடுத்து விட்டு மூவரும் சேர்ந்து கூட்டாக அத்துமீறலுக்கு உட்படுத்தினர்

 வீட்டில் மறைத்து வைத்திருந்த நகைகள் கொள்ளை

பின்னர் வீட்டில் மறைத்து வைத்திருந்த 80 இலட்சம் பெறுமதியான இரத்தினக் கல், 56 இலட்சம் பெறுமதியான 15 பவுணுக்கு அதிகமான தங்க நகைகள், 5 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம், காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள் என பலவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

வவுனியாவில் பெண்ணை அத்துமீறலுக்கு உட்படுத்தி நகைகளை கொள்ளையடித்த ஐவர் கைது! | Five Arrested For Raping A Woman In Vavuniya

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வவுனியா தலைமை காவல் நிலையத்தின் குற்த்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் ஆபத்தான நிலையில் இருந்த, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

இதன்போது, பாதிக்கப்பட இப்பெண்ணின் தொழில்சாலையில் பணியாளர்களாக வேலை செய்த 35 வயதான உக்குவெல மாத்தறை பகுதியை சேர்த்த நபர் ஒருவரையும், 29 வயதான களேமிதுனுவெல, சிவலாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றொரு இளைஞரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.

கொழும்பில் ஷிரான் பாசிக்கின் ஐந்து ஹோட்டல்கள்! 2012 வெலிக்கடை சிறைக் கலவரத்திலும் தொடர்பு

கொழும்பில் ஷிரான் பாசிக்கின் ஐந்து ஹோட்டல்கள்! 2012 வெலிக்கடை சிறைக் கலவரத்திலும் தொடர்பு

காட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்பு

அதனைத்தொடர்ந்து நேற்றையதினம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, காடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திருடப்பட்ட இரத்தினக்கற்கள், தங்க நகைகள், வாகனப் புத்தகங்கள், திறப்புகள், 35 காணி மற்றும் வீட்டு உறுதிப்பத்திரங்கள்,கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன மீட்கப்பட்டது.

வவுனியாவில் பெண்ணை அத்துமீறலுக்கு உட்படுத்தி நகைகளை கொள்ளையடித்த ஐவர் கைது! | Five Arrested For Raping A Woman In Vavuniya

குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.எம்.யே.எஸ்.ரத்னமலலா வழிகாட்டலில் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி லங்காசிங்க, பதில் பொறுப்பதிகாரி ஆர். பந்துல தலைமையில் காவல்துறை சார்ஜன்டுகளான சந்தன (16446), கேரத் (14692), பிரியங்கர(47358) உபாலி(60954) சம்பத் ( 11388) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.  

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022