ஏ9 வீதியில் கோர விபத்து : ஒருவர் கவலைக்கிடம்
                                    
                    Sri Lanka Police
                
                                                
                    Anuradhapura
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    கண்டி - யாழ்ப்பாணம்(kandy jaffna) ஏ9 வீதியில் இகிரியகொல்லேவ பகுதியில் இன்று (20) இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசரும் முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலை
விபத்தில் நான்கு பேர் காயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மதவாச்சி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், எரிபொருளை ஏற்றிச் சென்ற பவுஸரும் அருகில் உள்ள வயல்வெளியில் கவிழ்ந்துள்ளது.
இந்நிலையில், எரிபொருள் பவுசரில் உள்ள எரிபொருள் வேறு ஒரு பவுசருக்கு மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            1ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்